திருவாடனை கொரோனாநோய்தடுப்பு விழிப்புணர்வு பேரணி வட்டார மருத்துவ அலுவலர் வைதேகி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்

இந்திய அரசின் மக்கள் தொடர்பு கள அலுவலகம் தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் சார்பில் தேசிய மகளிர் தினம் கொரோன நோய் தடுப்பு முறை குறித்த சிறப்பு விழிப்புணர்வு முகாம்
இந்திய அரசின் மக்கள் தொடர்பு கள அலுவலகம், தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் சார்பில் இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் தேசிய மகளிர் தினம் மற்றும் கொரோன நோய் தடுப்பு முறை குறித்த  சிறப்பு விழிப்புணர்வு ஊர்வலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. 
விழிப்புணர்வு ஊர்வலத்தை வட்டார மருத்துவ அலுவர் இரா.வைதேகி கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக கல்லூரியை அடைந்தது. இந்த ஊர்வலத்தில் ஏராளமான கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர். பின்னர் நடைபெற்ற சிறப்பு விழிப்புணர்வு முகாமில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை மற்றும் ஒரே பாரதம் உன்னத பாரதம் பற்றி கல்லூரி மாணவ மாணவிகளிடம் எடுத்துரைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் முனைவர் அ.மாதவி தலமை வகித்தார். கொரோனா தடுப்பு பற்றி வட்டார மருத்துவ அலுவலர் இரா.வைதேகி கூறும்போது கொரோனா வைரசில் இருந்து நம்மை காத்து கொள்ள மற்றவர்களுக்கு கை கொடுக்க வேண்டாம் என்றும், நாளொன்றுக்கு 15 முறை கைகளை கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும் என்றும், இருமல், மற்றும் தும்மலின் போது வாய், மற்றும் மூக்கை  கைகுட்டையால் மூடிக்கொள்ள வேண்டும் என்றும்  மற்றவரிடம் பேசும்போது ஒரு மீட்டர் இடைவெளியில் நின்று பேச வேண்டும் என்றும்  இதன் மூலம் கொரோனா வில் இருந்து நம்மை பாது காத்து கொள்ளலாம் என்றும் தெரிவித்தார். 
 ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் திருமதி ஜெயந்தி அவர்கள் பேசும்போது மாணவிகள் கண்டிப்பாக காலை உணவை உட்கொள்ள வேண்டும் என்றும் ஊட்ட சத்துநிறைந்த உணவு வகைகளை எடுத்துக்கொள்வதன் மூலம்  இரத்த சோகையில் இருந்து விடுபடலாம் என்று தெரிவித்தார். 
முன்னதாக இந்திய அரசின் இசை நாடக பிரிவின் சார்பாக விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது மற்றும் நாம் எப்படி கை கழுவ வேண்டும் என்று செயல்முறை விளக்கம்  தரப்பட்டது. இவ்விழாவில் களவிளம்பர உதவி அலுவலர் மு.ஜெயகணேஷ், குழந்தைகள்  நிகழ்சசியில் திட்ட அலுவலர் கி.விஜயா, கல்லூரி தமிழ்துறை தலைவர் மு.பழினியப்பன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் புகைப்பட கண்காட்சி, விழிப்புணர்வு திரைப்படம், கட்டுரை போட்டி, வினாடி வினா போட்டிகள் நடைபெற்றது போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது." alt="" aria-hidden="true" />" alt="" aria-hidden="true" />" alt="" aria-hidden="true" />


Popular posts
தமிழக முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். தம்பித்துரை.,ஜி.கே. வாசன்
Image
மாஞ்சோலை பகுதியில் மக்கள் வாழ்வாதாரத்திற்காக அத்தியாவசிய பொருட்களை அனுமதிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு
Image
தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் கிருமிநாசினி தெளித்து வருகின்றனர்
Image
வாணியம்பாடியில் காவல் துறை சார்பில் வெளி மாநில தொழிலாளர்கள் மற்றும் கருணை இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு உணவு பொருட்களை மாவட்ட கண்காணிப்பாளர் விஜய்குமார் வழங்கினார்.
Image
உலக சிறுநீரக தினம் வேலூர் சிஎம்சி யில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது
Image